ஜனாதிபதி கோட்டாவின் அதிரடி; வெங்காயத்தின் விலை குறைப்பு..!

0

இன்று முதல் அமுலாகும் வகையில் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் உச்ச பட்ச சில்லறை விலையாக 150 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதற்கு முன்னர் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் உச்சபட்ச சில்லறை விலையாக 190 ரூபா காணப்பட்ட நிலையில் இன்று முதல் 150 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை நேற்றைய தினம் பருப்பு 65ரூபாயாகவும், மீன் ரின் 100ரூபாயாகவும் அறிவிக்கப்பட்ட போதும் வர்த்தக நிலையங்களில் விலைக் குறைப்பு உரிய வகையில் மேற்கொள்ளப்படவில்லை.


அத்துடன் அரச சதோசாக்களில் பொருட்கள் பதுக்கப்பட்டு மக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேய வழங்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.