இலங்கையில் கொரோனா நோயாளர்கள் 51 ஆக அதிகரிப்பு; வீதிகள் முடங்கின..!

0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 8 பேர் இன்றைய தினம் கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.


இதற்கு அமைவாக இதுவரையில் நாட்டில் கொரொனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று வரையில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுள் உள்வாங்கப்பட்ட நபர்களின் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.


இவ்வாறு கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 18 நோயாளிகளும் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர்கள். இவர்களுள் ஒருவர் பிரிட்டனில் இருந்து வந்தவர் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இதேவேளை கொரோனா அச்சத்தால் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான வீதிகள் மக்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.