கொரோனா வைரஸ் தாக்கம்; மூடப்பட்டது கட்டுநாயக்க விமான நிலையம்..!

0

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தினை மூடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.


ஸ்ரீலங்காவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொது மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், நாட்டினுல் மேலும் வைரஸ் தாக்கம் அதிகரிக்கக் கூடாது என்பதனால் இந்த முடிவினை அரசாங்கம் எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், விமான சேவைகள் அதிகார சபைக்கும் இடையில் இடம் பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றிலிருந்து இரண்டு வாரங்களுக்கு விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக் காட்டத்தக்கது.