வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்; மாமனிதர் ரவிராஜின் மனைவி சசி..!

0

இன்றைய தினம் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய சமூக செயற்பாட்டாளராகவும் சாவகச்சேரி மண்ணின் மைந்தனும், தமிழ் தேசிய விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் நடராசா ரவிராஜ் அவர்களின் துணைவி சசிகலா வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்.


இன்றைய தினம் யாழ் மாட்டின் வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில், கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா முன்னிலையில் இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவில் கையொப்பம் இட்டார்.


தமிழ் தேசிய விடுதலைக்காகவும் தமிழரின் விடிவுக்காகவும் தன்னையே ஆகுதியாக்கி தனது குடும்பத்தை தவிர்க்க விட்டுச் சென்ற அந்த உயர்ந்த மனிதரை ஒருகணம் மனதில் நிறுத்தி,


யுத்த காலத்தில் புலம்பெயர் தேசத்தில் ஓடி ஒழிந்து வாழ்ந்த பின் தமிழ் தேசிய அரசியலை சிதைப்பதற்காக அரச தரப்புடன் கைகோர்த்து சருகுப் புலிகளாக அரச முகவராக செயற்படும் தமிழ் தேசிய முன்னணியை வீட்டுக்கு அனுப்ப அதி கூடிய வாக்குகளால் திருமதி ரவிராஜை பாரளுமன்றம் அனுப்புவோம்.