கொரோனா அச்சம்; இன்று முதல் மூன்று தினங்களுக்கு விஷேட விடுமுறை..!

0

இன்று முதல் மூன்று தினங்களுக்கு விசேட விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு வேலைதிட்டத்திட்டத்திற்கு அமைய இன்று செவ்வாய் கிழமை முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் விசேட விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.


வங்கிகள், சுகாதாரம், உணவு விநியோகம், போக்குவரத்து, மாவட்ட செயலக காரியாலயங்கள், பிரதேச செயலக காரியாலயங்கள், அத்தியாவசிய சேவைகள் இயங்கும்.

அதேவேளை இவை தவிர்ந்த அரச கூட்டுத் தாபனங்கள், திணைக்களங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் இந்த பொது விடுமுறை அமுலாகும்.


அத்துடன் தனியார் நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு வேலைத் திட்டத்திற்கு அமைய இந்த விடுமுறையை நீடிப்பதற்கு அல்லது நீடிக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.