சதோசா முறைகேடு; முன்னாள் அமைச்சர் ரிஷாட்டை 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு..!

0

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளியன்று கொழும்பு கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகமான 4 ஆம் மாடியில் ஆஜராகுமாறு அறிவித்தல் அனுப்பட்டுள்ளது.


இதற்கான அறிவித்தலானது கறுவாத் தோட்டம் பொலிஸாரின் ஊடாக அனுப்பட்டுள்ளது.

ச.தொ.ச நிறுவனத்தின் ஆவணங்கள் பலவற்றை மூன்றாம் தரப்பு நபர் ஒருவரின் கைக்கு கிடைகக் செய்தமை, மின் பிறப்பாக்கிகளை கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் மற்றும் 7,340 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியின் போது இடம் பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்தான விசாரணைகளுக்காக ரிஷாட் பதியுதீன் இவ்வாறு சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டுள்ளார்.


இதேவேளை அண்மையில் குறித்த முன்னாள் அமைச்சரின் சகோதரர்கள் காணி மற்றும் நிதி மோசடிகள் ஈடுபட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.