கொரோனாவில் இருந்து பாதுகாப்புப் பெற புகைத்தலை கைவிடுங்கள்..!

0

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு புகைத்தலை கைவிடுவது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் உகந்தது என்று சுகாரதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.


கொரோனா வைரஸ் அல்லது ( COVID19 ) பாதிப்புக்கு உள்ளாகுவோருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தும். இதன் போது ஈரல் பலவீனமாக இருந்தால் இந்த உயிரிழப்பு எளிதில் ஏற்பட கூடும்.


இதனால் சிகரட் முதலானவற்றை புகைப்பதினால் ஈரல் பலவீனமடையும் என்பதினாலேயே புகைத்தலை தவிர்க்;குமாறு வலியுறுத்தப்படுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.