கொரோனா தடையை மீறி தனியார் வகுப்பு நடாத்திய ஆசிரியர் கைது..!

0

கொரோனா அச்சம் காரணமாக காரைதீவுப் பிரதேசத்தில் தனியார் வகுப்புகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த உத்தரை மீறிச் பிரத்தியோக வகுப்புகளை நடத்திய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவர் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளதோடு, நேற்று காலை குறித்த வகுப்பு நடாத்தப்பட்டதை அறிந்து பொது மக்கள் பிரதேச சபைத் தவிசாளரிடம் முறையிட்டுள்ளனர்.


இந்நிலையில் அவர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்ததையடுத்தே குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதேவேளை வடக்கில் குறிப்பாக வவுனியாவின் வைரவ புளியங்குளம், குருமன்காடு பகுதிகளில் கணிணி வகுப்புக்கள், ஆங்கில வகுப்புக்கள், கணித, விஞ்ஞான வகுப்புக்கள் என்பன குழு வகுப்புக்களாக நடைபெறுகின்றன.


அரசில் உத்தரவையும் மீறி இவ்வாறான வகுப்புக்களை ஒழுங்கு செய்துள்ளவர்கள் மீது உடன் நடவடிக்கை எடுஉக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றோம்.