கொரோனா தொடர்பில் சரியான தகவல்களை ஊடகங்கள் மக்களுக்கு வழங்க வேண்டும்..!

0

கொரோனா வைரஸ் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

இதனால் எந்தவித அச்சமும் கொள்ள தேவை இல்லை என்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ தெரிவித்தார்.


சமூக ஊடக வலைத் தளங்களில் முன்னெடுக்கப்படும் தவறான விடயங்களில் பொது மக்கள் ஏமாந்து விடக்கூடாது.

தொலைக்காட்சி மற்றும் ஊடக நிறுவனங்கள் ஆகியன எம்முடன் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் தொடர்பாக சரியாக தகவல்களை பொது மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

உத்தியோகபூர்வமான தகவல்களை வழங்குவதற்காக நாம் எமது நிலையத்தில் கொவிட் – 19 என்ற ஊடக மத்திய நிலையத்தை அமைத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.


நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற கொவிட் – 19 என்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் மிக கவனத்துடன் நடவடிக்கை மேற்கொள்வதாகவும், பொதுமக்கள் எந்த வகையிலும் குழப்பமடைய தேவையில்லை என்றும் சுட்டிக் காட்டினார்.


பல்வேறான தவறான கருத்துக்களுடனான ஊடகங்கள் மத்தியில் அனர்த்தம் தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப் படுவதனால் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அறிக்கை, தகவல்களை முக்கியமாக ஊடகங்கள் பயன்படுத்த வேண்டும்.

மக்கள் வாழ்க்கையை வழமைப் போன்று முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முன்நின்று செயல்படுகின்றது.


இந்த வைரஸ் தொடர்பாக பொது மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக அனைத்து இலத்திரனியல் ஊடகங்கள் ஒன்றிணைந்து ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணி தொடக்கம் 11.00 மணி வரையில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வேலைத் திட்டத்தின் கீழ் கொரோனா வைரஸ் தொடர்பாக பொது மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான நேரடி ஒளிபரப்பும் இடம் பெறவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.