கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல்; திங்கட் கிழமை (16) பொது அரச விடுமுறை..!

0

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் திங்கட் கிழமை (16 ஆம் திகதி) பொது அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இத் தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.


இதேவேளை நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 103 பேர் 17 வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் 10 நோயாளிகள் இனங்காணப் பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.