வவுனியாவில் தங்கியிருந்த வெளிநாட்டவருக்கு கொரோனா; அதிர்ச்சியில் மக்கள்..!

0

வவுனியா – கந்தகாடு தனிமைப்படுத்தும் நிலையத்தில் இருந்து பொலன்னறுவை வைத்திய சாலைக்கு மாற்றப்பட்ட 42 வயதான ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


இதனையடுத்து, இத்தாலியியில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த 56 வயதான ​பெண் ஒருவருக்கும் அவரின் உறவினரான 17 வயது பெண்ணுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 103 பேர் 17 வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.


இதேவேளை இன்று பிற்பகல் 7.30 வரையான தரவுகளின் அடிப்படையில் நாட்டில் 10 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளளது.