கொரோனா சந்தேக நபர்களை வவுனியாவில் இருந்து வெளியேற்றுமாறு போராட்டம்..!

0

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 267 பேர் வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்டு கொரனா தொற்று மருத்துவ பரிசோதனைக்காக பம்பைமடு இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்ட அரசின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா நெளுக்குளம் சந்தியில் இன்று (14.03.2020) காலை 10.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்ட இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் பிரதேச சபை தலைவர் ரவி, பிரதேச சபை உறுப்பினர்கள், ஊழியர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், அரசியல்வாதிகள் , பொதுமக்கள் , வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசே அகற்று அகற்று கொரோனா வைரஸ் முகாமை அகற்று, தமிழ் மக்களை காப்பற்ற அகற்று அகற்று போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்தனர்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவர்,


எங்களுடைய மக்கள் கொரோனா வைரஸ் தொடர்பாக பீதியில் காணப்படுகின்ற சமயத்தில் இலங்கையில் பல்வேறு மாவட்டங்கள் இருக்கின்ற போதிலும் வடகிழக்கில் இவ்வாறான நோயாளர்களை தங்க வைப்பது என்பது கண்டிக்கத்தக்க விடயமாகும். வடகிழக்கில் இவ்வாறு அமர்த்துவது ஓர் இன அழிப்பாக சிந்திக்க வேண்டியுள்ளது என தெரிவித்தார்.