நாட்டிலிருந்து வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக இலங்கையர் வெளியேறத் தடை..!

0

கொறோனா வைரஸ் COVID 19 தாக்கத்தை கட்டுப்படுத்தும் வரை இலங்கையர் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக நாட்டில் இருந்து வெளியேறுவதை கட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


மறு அறிவித்தல் வரை இந்த நடைமுறை நடைமுறையில் இருக்குமென வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. இது தொடர்பிலான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.


வெளிநாட்டு வேலைவாய்புப் பணியகத்தின் தலைவரின் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சிரேஷ்ட முகாமையாளர்கள் உட்பட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதேவேளை இலங்கையில் இதுவரை 5 கொரோணா நோயாளிகள் இனங் காணப் பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.