சகல தனியார் கல்வி நிலையங்களுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை பூட்டு..!

0

வடமாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையகளுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை விடுமுறையளிக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பீ எஸ் எம் சார்ள்ஸ் சிறப்புப் பணிப்புரை விடுத்துள்ளார்.


இது தொடர்பில் ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் ஏற்படகூடிய ஆபதில் இருந்து எமது மாணவ சமூகத்தை பாதுகாக்கும் நோக்கில் இன்று முதல் ஏப்ரல் 20ஆம் திகதி வரை இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மாணவர்களுடைய நலனை மேலும் உறுதிபடுத்தும் பொருட்டு வடமாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையகளுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை விடுமுறையளிக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பீ எஸ் எம் சார்ள்ஸ் சிறப்புப் பணிப்புரை விடுத்துள்ளார்.


இவ் ஒழுங்கினை உள்ளூராட்சி சபைகள் (மாநகர சபை, நகரசபை, பிரதேச சபைகள்) உரிய முறையில் மேற்பார்வை செய்து அர்ப்பணிபுடன் இதனை நடை முறை படுத்தும்படியும் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வடமாகாண ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்- எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதேவேளை உயர்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பல்கலைக் கழகங்கள், கல்வியற் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் என்பவற்றுக்கு இவ்வாறான சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.