நாளையிலிருந்து ஏப்ரல் 20ஆம் திகதி வரை பாடசாலைகள் அனைத்தும் விடுமுறை..!

0

கொரோனா வைரஸ் தொடர்பில் முன் எச்சரிக்கையாக நாட்டின் அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் ஏப்ரல் 20ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.


நாட்டில் கொரோனா பீதியை அடுத்து, பொது மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக நாளைய தினத்திலிருந்து பாடசாலைகளை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் பெற்றோர்கள் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து அச்சம் அடைந்துள்ளதை கருத்திற்கொண்டும் வைரஸில் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.