வடக்கு ஆளுனரால் தூக்கி எறியப்பட்ட சுகாதார அமைச்சின் செயலாளர்..!

0

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.தெய்வேந்திரன் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம். சார்ள்ஸ் இந்த பதவிநீக்க உத்தரவை வழங்கியுள்ளார். இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளராக கே.தெய்வேந்திரன் கடந்த மார்ச் 4ஆம் திகதி தொடக்கம் மீளவும் அந்தப் பதவியில் தொடர் ஆளுநரால் கடிதம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மார்ச் 4ஆம் திகதிய நியமனக் கடிதத்தை இன்று நடைமுறைக்கு வரும்வகையில் மீளப்பெறுவதாக ஆளுநரால் நேற்று கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


மேலும் சுகாதார அமைச்சின் செயலாளர் கே.தெய்வேந்திரன் கொழும்புக்கு அழைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த செயலாளர் கடந்த கூட்டைப்பின் மாகாண ஆட்சியில் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளராக இருந்த போது மாகாண வருமானப் பரிசோதகர் பதவிக்கான பரீட்சை வினாத்தாள் திருத்தத்தில் மோசடி செய்யப்பட்டு இடமாற்றம் வழங்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.