வவுனியாவில் சிறுமி பாலியல் வன்புணர்வு; பாடசாலை அதிபர் தொடர்பு..!

0

வவுனியா பாவக்குளம் படிவம் 2 இல் சிறுமியொருவரை பாடசாலையொன்றின் அதிபர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக செட்டிகுளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக தெரியவருகையில்,

செட்டிகுளம் படிவம் 2ல் வசிப்பவரும் காக்கையன் குளத்தில் பாடசாலையொன்றில் அதிபராக கடமையாற்றும் நபரொருவர் அதே கிராமத்தில் வசிக்கும் தாய் தந்தையை பிரிந்து வாழும் 16 வயதுடைய சிறுமியை தனது வீட்டில் தங்க வைத்துள்ளர்.

இந்நிலையில் சிறுமி மீது அதிபரினால் பாலியல் ரீதியான துன்புறுத்தல் மேற்கொள்ளப்படுவதாக அயலவர்களினால் செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந் நிலையில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் குறித்த கிராமத்திற்கு சென்று சிறுமியுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் சிறுமி 15 வயதில் இருந்து உடல் ரீதியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் செட்டிகுளம் பொலிஸாரின் உதவியுடன் பொலிஸ் நிலையத்தில் சிறுமியை ஒப்படைத்துள்ளனர்.

இதன் பிரகாரம் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் தமது தரப்பு வாக்கு மூலத்தினை பொலிஸாருக்கு வழங்கியதையடுத்து சிறுமியிடம் செட்டிகுளம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இவற்றின் அடிப்படையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரான அதிபரை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.