உள்ளக முரண்பாடுகளை எதிர்நோக்கியுள்ள அரசியல் கட்சிகளுடன் மகிந்த சந்திப்பு..!

0

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, உள்ளக முரண்பாடுகளை எதிர் நோக்கியுள்ள சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களை இன்று (10) சந்தித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழவர் ஜனநாயக முன்னணி, ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி, ஐக்கிய இலங்கை மகா சபை கட்சி, லிபரல் கட்சி மற்றும் இலங்கை முற்போக்கு முன்னணி ஆகிய 6 கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.


இதனிடையே தேர்தலுக்கான வேட்புமனு எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது. வேட்புமனுக்கள் மாவட்ட ரீதியில் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது.

மேலும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் தபால் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நாளை (11) இடம்பெறவுள்ளது.


இதுவரை 24 சுயேட்சைக் குழுக்கள் பொதுத் தேர்தலுக்கான கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.