பாராளுமன்ற தேர்தல் பிற்போடும் சாத்தியம்; அதிர்ச்சியில் அரசியல்வாதிகள்..!

0

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை குறிப்பிட்ட திகதியில் நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் தேர்தல் ஆணைக் குழுவுக்கும் சுகாதார அமைச்சுக்குமிடையில் பேச்சு நடந்துள்ளது.


தேர்தல் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களின் சுகாதார பாதுகாப்பு நலன்களை கருத்திற் கொண்டு முன்னேற்பாடாக நடவடிக்கைளை எடுக்கவும் – தேர்தல் நடைபெறும் ஏப்ரல் மாதமளவில் இதன் தாக்கம் அதிகரிக்கலாம் என்பதாலும் தேர்தல் ஆணைக்குழு இந்த விடயத்தை ஆராய்ந்துள்ளதாக தெரிகிறது.


எவ்வாறாயினும் இவ்வாரம் நடைபெறவுள்ள மற்றுமொரு சுற்றுப் பேச்சின் போது இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.