வவுனியாவில் பாடசாலைச் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்; காவாலி இவன்தான்..!

0

வவுனியா தாண்டிக்குளம் பகுதியிலிருந்து முச்ச்க்கரவண்டியில் சென்ற 14வயதுடைய பாடசாலை மாணவியை முச்சக்கர வண்டியின் சாரதி நேற்றிரவு (09.03.2020) பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிய நிலையில் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வவுனியா தாண்டிக்குளம் பகுதியிலிருந்து கிடாச்சூரி நோக்கி செல்வதற்கு இரவு நேரத்தில் பேரூந்து இன்மையினால் குறித்த மாணவி தாண்டிக்குளம் பகுதியிலிருந்து முச்சக்கர வண்டியில் கிடாச்சூரியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.


முச்சக்கர வண்டியில் தனிமையில் மாணவி இருந்ததை அவதானித்த முச்சக்கர வண்டியின் சாரதி மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குறித்த மாணவியினை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளான்.

இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி ஈச்சங்குளம் பொலிஸில் முறைப்பாடு மேற்கொண்டதை அடுத்து முச்சக்கர வண்டியின் சாரதியினை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்ததுடன் பாதிக்கப்பட்ட மாணவியினை மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.


இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை தாண்டிக்குளம் தொடக்கம் கல்மடு வரை சிறுவர்களை இலக்கு வைத்து கஞ்சா, மாவா, ஹெரோயின், இனிப்புப் பாக்கு போன்ற போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்படுகின்றன.


எனினும் பாதுகாப்புத் தரப்பினர் குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில் பின் நிற்பதை அவதானிக்க முடிகின்றது. எனவே இவ் விடயத்தில் மக்கள் அதிகாரத்தை கையில் எடுக்க முன் வர வேண்டும்.