தேர்தலில் களமிறங்கும் விடுதலை புலிகளின் மூத்த தளபதியின் சகோதரி..!

0

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதலாவது லெப்டினன்ட் கேணல் விக்டரின் சகோதரி மாலினி , எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அவர் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சார்பில் களமிறங்குவார் என தெரிய வருகிறது.


விடுதலைப் புலிகளின் முன்னாள் மன்னார் மாவட்ட தளபதியான விக்டரின் சகோதரியான மாலினி மடு வலய கல்விப் பணிப்பாளராக செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.