தேசியத் தலைவரின் நன்மதிப்பைப் பெற்றவர் கிளிநொச்சியில் போட்டி..!

0

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் நன் மதிப்பைப் பெற்றவரும், தேசியத் தலைவரின் பிள்ளைகளுக்கு கல்வியைப் போதித்த முன்னாள் ஆசிரியரும், அதிபருமாகிய கந்தையா இரத்திரகுமார் இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமாகிய விக்னேஷ்வரனின் தலைமையில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
மேலும் இவர் யுத்த காலத்திலும், யுத்தத்திற்கு பின்னரான காலத்திலும் தன்னாலாகிய சேவைகளை கிளிநொச்சி மண்ணில் மக்களுக்கு செய்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தாமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள், தாமே புனிதர்கள் என காட்டி விபச்சார அரசியல் செய்பவர்கள் மத்தியில், தமிழ் தேசியத்தின் மீதான கொள்கைப் பற்றுடன் சலுகைக்கு விலை போகாத, தமிழ் தேசிய பற்றுடன் செயலாற்றும் கந்தையா இரத்தினகுமார் அவர்களை கிளிநொச்சி மண்ணில் இருந்து பாராளுமன்றம் அனுப்புவோம்..!