கொரோனாவால் இன்னொரு சீனாவாக மாறிவரும் இத்தாலி; 230 பேர் பலி..!

0

சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் சிறிது சிறிதாக சீனா முழுவதும் பரவி 2000க்கும் அதிகமானோரின் உயிரைக் குடித்தது.

அதுமட்டுமின்றி பல்லாயிரக் கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்த நிலையில் சீனாவை அடுத்து இத்தாலியில் கொரோனா வைரஸ் கடுமையாக பரவி வருகிறது.

இது வரை இத்தாலியில் 6300 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வைரஸ் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 230 ஐ தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள இத்தாலியின் லோம்பார்டி என்ற நகரம் மொத்தமாக சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.


இந்த நகரில் இருந்து யாரும் வெளியே போகவும், இந்த நகருக்குள் யாரும் உள்ளே செல்லவும் முடியாது.

மேலும் இத்தாலியில் உள்ள 16 மில்லியன் மக்கள் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


லோம்பார்டி நகரம் மட்டுமின்றி மிலன், வெனிஸ் உள்ளிட்ட வடக்கு பகுதியில் உள்ள நகரங்கள் பலவற்றை இத்தாலி அரசு தனிமைப்படுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.