இரண்டு பட்டது ஐ.தே.க; ரணில் – சஜித் தனித் தனியாக போட்டியிட திட்டம்..!

0

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமை தீவிரமடைந்துள்ள நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரணில் அணி தனியாகவும் சஜித் அணி தனியாகவும் போட்டியிடுவதற்கு திட்டமிடப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் பிரகாரம் ரணில் தரப்பினர் ஐக்கிய தேசிய கட்சியென்ற பெயரில் யானை சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ளனர்.அதேவேளை சஜித் தரப்பினர் தொலைபேசி சின்னத்தில் ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தினம் தாம் போட்டியிடுவதை உறுதிப்படுத்தி ஐ.தே.க செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.எவ்வாறாயினும் இரண்டு தரப்பையும் ஒன்றிணைப்பதற்காக சில தரப்பினர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.