சமகால அரசியல் நிலை குறித்து வடமராட்சியில் விக்னேஸ்வரன் கலந்துரையாடல்..!

0

சமகால அரசியல் நிலைமை குறித்து வடமராட்சி இளையோருடன் பருத்தித்துறை சூரிய மகாலில் தமிழ் மக்கள் கூட்டணி முக்கியஸ்தர்கள் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்து நடத்தியிருந்தனர்.

சமகால அரசியல் நிலைமை குறித்து வடமராட்சி இளையோருடன் நடைபெற்ற தமிழ் மக்கள் கூட்டணியின் கலந்துரையாடல் நிகழ்வு.தமிழ் மக்கள் கூட்டணியின் வடமராட்சி தொகுதி அமைப்பாளரது அனுசரணையுடன் இளைஞர் அணி சார்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த சமகால அரசியல் நிலைமை குறித்த இளையோர் சந்திப்பு நிகழ்வு இன்று சனிக்கிழமை பருத்தித்துறையில் நடைபெற்றது.

தமிழ் மக்கள் கூட்டணியின் வடமராட்சி அமைப்பாளர் இரா.மயூதரன் தலைமையில் நடைபெற்ற இவ் இளையோர் சந்திப்பு இன்று மு.பகல் 11.00 மணியளவில் பருத்தித்துறையில் உள்ள சூரிய மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.நிகழ்விற்கு வருகை தந்த தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் கௌரவ நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களை பொன்னாடை போர்த்தி இளைஞர் அணி இணைப்பாளர் கே.கிருஸ்ணமீனன் வரவேற்றதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் நடைபெற்றது.

மங்கல விளக்கினை தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் கௌரவ நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களும் இளையோர் சார்பில் பங்கேற்றிருந்த யுவதி ஒருவரும் ஏற்றி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வில் நிகழ்வினை தலைமை தாங்கி நடத்திய இரா.மயூதரன் தலைமையுரையை ஆற்றியிருந்தார்.

 

தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணி இணைப்பாளர் கே.கிருஸ்ணமீனன் தொடர்ந்து கருத்துரை வழங்கியதை தொடர்ந்து கொள்கை பரப்புச் செயலார் க.அருதவபாலன் தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை குறித்தும் சமகால அரசியல் விடயங்களினூடாக தமிழ் மக்கள் ஏகபிரதிநிதிகள் செய்யத் தவறியவற்றை விளக்கிக் கூறியிருந்தார்.நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் கௌரவ நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் சிறப்புரையாற்றியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து இளையோர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழ் மக்கள் கூட்டணியினரால் பதில்கள் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் கௌரவ நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், கொள்கை பரப்புச் செயலாளர் க.அருந்தவபாலன், இளைஞர் அணி இணைப்பாளர் கே.கிருஸ்ணமீனன் மற்றும் வடமராட்சி அமைப்பாளர் இரா.மயூதரன் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.