இலங்கை மீது பொருளாதார தடையை விதிப்பதற்கு தயாராகும் பிரித்தானியா..!

0

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை விதிப்பதற்கு பிரித்தானியா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரித்தானிய பொதுநலவாய விவகார இராஜாங்க அமைச்சர் நிஜல் ஆடம்ஸ் இதனை கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


தொழிலாளர் கட்சி பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் அஜசல்கான் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


அத்துடன் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மீது நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு தவறி விட்டதாக தெரிவித்த அவர், இதன் அடிப்படையில் பொருளாதார தடையை விதிக்க ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.