ஹெரோயினுக்காக தனது காதலியை 3000 ரூபாய்க்கு விற்ற காதலன்..!

0

ஹெரோயின் பயன்படுத்துவதற்காக தனது 18 வயது காதலியை பணத்திற்காக விற்றதாக 40 வயதான நபர் மீது நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கட்டானாவின் கலுவாரிப்புவ திசகாவட்டேவில் வசிக்கும் 40 வயதுடைய குறித்த நபர் , 18 வயதான தனது காதலியை பணத்திற்காக விற்பனை செய்துள்ளார்.


ஜூலை 2016 முதல் ஒக்டோபர் 2016 வரை அந்த யுவதி விற்பனை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

குறித்த யுவதி எதிர்பாராத விதமாக 40 வயதுடைய ஒருவரை சந்தித்து, காதல் வசப்பட்டுள்ளார். அப்போது, அந்த நபர் தான் திருமணம் செய்து, தனக்கு குழந்தைகள் இருப்பதை மறைத்துள்ளார். அதுமட்டுமல்லாது சந்தேநபர் போதைக்கு அடிமையானவர் என்பதையும் யுவதி அறிந்திருக்கவில்லை.


இந்நிலையில் போதைப்பொருள் பாவனைக்கு பணம் தேவைப்பட்ட போது, நபரொருவரிடம் 3,000 ரூபாய் வசூலித்துக் கொண்டு, அவரிடம் தனது காதலியை சந்தேக நபர் ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து யுவதி அதற்கு மறுத்த போது, அவரை மிருகத்தனமாக தாக்கியதில் அச்சமடைந்த யுவதி அதற்கு இணங்கிய நிலையில் 2016 ஜூலை தொடக்கம் ஒக்ரோபர் வரை இந்த வழக்கம் நீடித்ததாகவும் கூறப்படுகின்றது.


இந்த கொடூரத்தை சகித்துக் கொள்ள முடியாத யுவதி, ஆசாமியின் பிடியிலிருந்து தப்பியோடி வந்து, கட்டான பொலிஸ் குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

யுவதியின் முறைப்பாட்டினை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.