கட்டுநாயக்க விமான நிலையத்தினுள் விமானப் பயணியுடன் ஒருவருக்கு அனுமதி..!

0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான பயணிகளுடன் வருவோருக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னர் விமான நிலையத்துக்கு உட்பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பயணிகளுக்கு முனையம் (லொபி மண்டபம்) வரை செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 28 ஆம் திகதி தொடக்கம் விமான பயணிகள் தவிர அவர்களது உறவினர்களுக்கு அல்லது நெருக்கமானவர்களுக்கு விமான நிலைய பகுதிக்குள் நுழைவது வரையறுக்கப் பட்டிருந்தது.

கொரோனா வைரஸின் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப் பட்டதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார்

இருப்பினும் தற்பொழுது இந்த வரையறை நீக்கப்பட்டுள்ளதுடன், ஒரு விமான பயணியுடன் ஒருவர் மாத்திரம் குறிப்பிட்ட பகுதிக்குள் அனுமதிக்கப்படுவர்.

இதற்காக அனுமதிச் சீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அனுமதிச் சீட்டிற்கான கருமபீடம் இன்று காலை முதல் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.