பெண்ணைக் காணவில்லை; கண்டு பிடிக்க உதவுமாறு கோரிக்கை..!

0

ஜோர்தானிற்கு தொழிலுக்காக சென்ற திருமதி. மருதமுத்து நாகமுத்து வடிவாம்பிகை ( Maruthamuthu Nagamuthu Vadivambikai) தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.

இவர் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்கு இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் பொது மக்களின் ஒத்துழைப்பை நாடியுள்ளது.

வவுனியா தரணிக்குளம், 4 ஆவது ஒழுங்கை, இலக்கம் 363 என்ற முகவரியைச் சேர்ந்த வடிவாம்பிகை 2009.02.12 ஆம் திகதி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இது வரையில் அவர் தொடர்பான எந்தவித தகவல்களும் கண்டறிய முடியாது உள்ளது.

இவர் தொடர்பான தகவல்களைத் தெரிந்திருப்போர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் தொடர்பு கொண்டு அவர் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 111 என்ற பிரிவிற்கு 0112864136 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும்.