விமல் வீரவன்சவின் பொறுப்பற்ற உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பணிப் புறக்கணிப்பு..!

0

இன்று(05) நண்பகல் 12 மணிக்கு பின்னர் தாம் சேவையில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

ரயில்வே சாரதிகளுக்கு போதியளவு பாதுகாப்பு இல்லை என்றும் உரிய பாதுகாப்பினை வழங்குமாறும் கோரி ரயில்வே சாரதிகள் சேவையில் இருந்து விலகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதைப் பொருள் போக்குவரத்தின் பிரதான மார்க்கமாக ரயில்வே சேவை இருப்பதாகவும், அதற்கு ரயில்வே ஊழியர்களும் தொடர்பு என கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் விமல் வீரவங்ச பொறுப்பற்று தெரிவித்திருந்தார்.

குறித்த கருத்தில் ரயில்வே சாரதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் உள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.