பாராளுமன்ற பொதுத் தேர்தல்; வவுனியாவில் மூவர் கட்டுப் பணம் செலுத்தினர்..!

0

எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னியில் போட்டியிடுவதற்காக மூவர் கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர்.


வன்னி தேர்தல் தொகுதியில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்காக நேற்று ஒருவரும் இன்று இருவரும் கட்டுப் பணத்தை வவுனியா மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல் திணைக்களத்தில் செலுத்தியுள்ளனர்.


எம்.பி.நடராஜா, இந்திக்க நாமல் லியனகே பத்திரன, கோடோ உட பத்திரனகே நீல்சாந்த என்ற மூவருமே சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை செலுத்தியவர்களாவர்.