நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான வர்த்தமானி வெளியானது..!

0

நாடாளுமன்றக் கலைப்புத் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 8வது நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு முதல் முடிவுக்கு வருகின்றது. புதிய நாடாளுமன்றம் 2020 மே 14ம் திகதி கூட்டப்பட உள்ளது.


இதற்கிடையில், பொதுத் தேர்தல் 2020 ஏப்ரல் 25ம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மார்ச் 12 முதல் 19 வரை கோரப்படவுள்ளன.

2015 ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, 8வது நாடாளுமன்றத்தின் ஐந்தாண்டு காலம் செப்டம்பர் 1, 2015 அன்று ஆரம்பமாகியது.


அத்துடன், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாண்டு காலம் நிறைவு பெறவிருந்தது.

எனினும், 19வது திருத்தத்தின் கீழ், நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.