விடுதலைப் புலிகள் ஜனநாயகப் படுகொலை செய்தே தனி இயக்கமாக உருவெடுத்தார்கள்..!

0

விடுதலைப் புலிகள் ஜனநாயகப் படுகொலை செய்தே தனி இயக்கமாக உருவெடுத்தார்கள். ஜனநாயக வழியில் செயற்படும் நாம் அதைப் போல செயற்பட முடியாது என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

யாழில் இன்று இடம்பெற்ற, அவரது ஆதரவாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்த காலத்தை கடந்து வந்த கட்சி இது. யுத்தகாலத்திற்கு முன்னரும் இருந்தது, யுத்த காலத்திற்கு பின்னரும் இருந்த கட்சி. யுத்த காலத்தில் அடங்கிப் போயிருந்த கட்சி. செயலிழந்திருந்த கட்சி. திடீரென ஜனநாயகப் பண்புகள் வந்து விடாது.

30 வருடம் வேறுவிதத்தில் பழவி விட்டோம். சொன்னதை செய்தது. யுத்த காலத்தில் கூட பல ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இருந்தன. ஒன்று மட்டும் இருக்கவில்லை. அது ஒன்றாக வந்தது எப்படியென்பதும் எல்லோருக்கும் தெரியும். சகோதரப் படுகொலைகளின் மூலமாகத்தான் அது ஒன்றாக வந்தது. அது எல்லோருக்கும் தெரியும் என்றார்.


எனினும் சுமந்திரனின் இக் கூற்றானது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதுடன், தன்னை இலவச விளம்பரம் செய்வதற்காகவே இவ்வாறான விஷமத்தனமான கருத்துக்களைக் கூறி வருவதுடன் தன்னை தமிழ் இனத்தின் மீட்பராகவும் கட்டிக் கொள்ள முனைகின்றார்.

இவருக்கான ஒரே தீர்வு ஒட்டுமொத்த தமிழரும் தமிழரசுக் கட்சியை புறக்கணிப்பதே தவிர குறித்த நபரின் கோமாளித்தனமான, தமிழர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் செயற்படுகளை கவனத்தில் எடுக்காது பயணிக்க வேண்டும்.


மேலும் ரணில் அரசுடனான தேனிலவு நிறைவுக்கு வந்த போதும் ஐதேகவை காப்பாற்றும் பணியை செய்யும் இவர் இதுவரை சிறைகளில் உள்ள எத்தனை தமிழர்களின் விடுதலைக்காகப் பாடுபட்டுள்ளார் என்பதே எம் முன் உள்ள வினா?