முஸ்லீம் அரசியல்வாதியின் பழிவாங்கலால் தமிழ் கிராம அலுவலர் உடன் இடமாற்றம்..!

0

மன்னார் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஓர் கிராம உத்தியோகத்தர் ஆளுங் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு சார்பாக நடக்கவில்லை எனத் தெரிவித்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இடமாற்றம் செய்யப்பட்டமை நேரடி அரசியல் தலையீட்டினை உறுதி செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசத்தில் பெரியமடு கிராம உத்தியோகத்தரே ஒரேநாளில் அவசரமாக கோவில்குளத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

27-02-2020 திகதியிடப்பட்ட கடிதமொன்றின் மூலம் புதிய பிரிவாகிய கோவில்குளத்துக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளார். என்னும் ஓரிரு தினங்களில் பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ள நிலையில் இந்த திடீர் இடமாற்றம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மிகவும் சிறப்பாகவும் கடமையாற்றி வந்த வினைத்திறன் மிக்க கிராமசேவகர் என அந்த கிராம மக்களிடம் நற்பெயரைப் பெற்ற கிராம அலுவலகர் மாற்றப்பட்டதன் பின்னணியில் ஆளும் தரப்புடன் ஒட்டியிருக்கும் மன்னார் அபிவிருத்தி தொடர்பான முக்கிய பொறுப்பிலுள்ள வவுனியா அரசியல்வாதியின் அழுத்தம் காரணமாகவே இந்த திடீர் இடமாற்றம் இடம்பெற்றது என கிராம மக்கள் பகிரங்கமாகவே குற்றம் சுமத்துகின்றனர்.

குறித்த கிராமத்தில் குறித்த அரசியல்வாதியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட சிலரின் போலி வாக்குப் பதிவுகளை நீக்கி தேர்தல் சட்டங்களை சரியாக நடைமுறைப்படுத்தி தனக்கு கிடைக்கவிருந்த பல முறையற்ற வாக்குகளை இல்லாமல் செய்தார் என்ற காரணத்தினால் குறித்த கிராம அலுவலகரை மாவட்ட செயலகமூடாக அறிவுறுத்தப்பட்டு இடமாற்றம் செய்யதமையே இந்த இடமாற்றத்திற்கான காரணம் எனக் கூறப்படுகின்றது.

பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ள நிலையில் வேண்டுமென்றே ஒரே நாளில் இடமாற்றத்துக்கான ஆணை வழங்குவது ஒரு பழிவாங்கும் நடவடிக்க என்பதனால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றின் கவனத்திற்கும் குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதேநேரம் இந்த அரசு ஆட்சிக்கு வந்த நூறு நாளில் மக்களிற்கு எந்த விதமான நன்மையும் கிட்டாத போதும் அடுத்த தேர்தல் இலாபத்திற்காக நூற்றிற்கும் மேற்பட்ட அரச அதிகாரிகள் பழிவாங்கப்பட்டமை மட்டுமே மிச்சம் என்றார்.

இவ்வாறு ஒரேநாளில் இடமாற்றம் என்னும் பெயரில் பழிவாங்கப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

குறித்த கிராம சேவகர் தொடர்பில் எமக்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை. ஆனால் அவரை உடன் இடமாற்றம் செய்யுமாறு மாவட்டச் செயலகத்தில் இருந்து எழுத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இந்த இடமாற்றத்தை மேற்கொள்ள வேண்டிய நிலமை ஏற்பட்டதாக பிரதேச செயலாளர் தெரிவித்த கருத்து தொடர்பில் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ்சிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது ,

நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒப்பமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் காதர் மஸ்தானின் முறைப்பாட்டிற்கு தீர்வாகவுமே மேற்படி இடமாற்றத்திற்கு உத்தரவிடப்பட்டதாக தெரிவித்தார்

எதிர்வரும் தேர்தல்களில் இவ்வாறான விஷக் கிருமிகளுக்கும், மாற்று இனங்களுக்கு அற்ப சலுகைகளுக்காகவும், முரண்பாடுகளுக்காகவும் வாக்களிப்பதை தமிழர்கள் உடன் நிறுத்த வேண்டும், தவறின் வன்னியும் விரைவில் காத்தான்குடியாக மாறும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.