தமிழர் தாயகத்தில் சிங்களவரை வலுப்படுத்தும் கோட்டா அரசின் செயற் திட்டங்கள் ஆரம்பம்..!

0

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓய தொழில் பேட்டை எதிர்வரும் திங்கட்கிழமை (3) திறக்கப்படவுள்ளது.

இது தொடர்பான நிகழ்வில் பிரதம அதிதியாக சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச கலந்து கொள்ளவுள்ளார்.தொழிற்சாலை மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சு இந்த தொழில்பேட்டையை முன்னெடுத்துள்ளது.

இதேவேளை தமிழர் தாகயத்தின் இதயம் என வர்ணிக்கப்படும் மணலாறு வெலிஓயாவாக மாற்றம் பெற்றுள்ளதுடன் இன்றுவரை அங்கிரு்து வெளியேற்றப்பட்ட தமிழர்கள் மீள் குடியேற்றப்படவில்லை.கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் தமிழர் தாயகத்தில் உள்ள சிங்கள பிரதேசங்களில் முடக்கப்பட்டிருந்த அபிவிருத்திகள் மீள ஆரம்பிக்கப் பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இதற்கான முழுப் பொறுப்பையும் கடந்த தேர்தலில் கோட்டாவிற்கு காவடி தூக்கிய தமிழர்களே ஏற்க வேண்டும்.