நேற்று பரிசில் இடம் பெற்ற வன்முறை வெறியாட்டத்தில் 54 பேர் கைது ..!

0

நேற்று வெள்ளிக் கிழமை பரிசில் இடம்பெற்ற வன்முறை வெறியாட்டத்தின் முடிவில் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பரிஸ் கார்-து-லியோன் நிலையத்துக்கு முன்பாக நேற்று நண்பகலின் பின்னர் ஆர்ப்பாட்டக் காரர்கள் பலத்த வன்முறையில் ஈடுபட்டனர்.

வீதியில் பொருட்களை தீயிட்டு கொழுத்தி பலத்த நெருக்கடியை உருவாக்கினார்கள். அதைத் தொடர்ந்து கார்-து-லியோன் நிலையம் முற்றாக மூடப்பட்டது.

இச்சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாத முறைகேடுகள் என பரிஸ் காவல்துறை தலைமைச் செயலக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

கலவரக் காரர்களை அடக்கிய காவல் துறையினர் மொத்தமாக 54 பேரை கைது செய்தனர். அவர்கள் மீதான விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.