கடந்த வருடம் இலங்கையின் வணிகப் பொருள் ஏற்றுமதி அதிகரிப்பு..!

0

இலங்­கையின் வணி­கப்­ பொருள் ஏற்­று­மதி வரு­மா­ன­மா­னது கடந்த ஆண்டு (2019) அதி­க­ரித்­துள்­ளது. 2018 ஆம் ஆண்டு 11890 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக இருந்த ஏற்­று­மதி வரு­மா­ன­மா­னது 2019 11940 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக பதி­வா­கி­யுள்­ளது.

அத­ன் அடிப்­ப­டையில் 2018ம் ஆண்டை விட 2019ம் ஆண்டு 50 மில்­லியன் அமெ­ரிக்க டொலரால் ஏற்­று­மதி வரு­மானம் அதி­க­ரித்­துள்­ளது. இந்த அதி­க­ரிப்பு 18 சத­வீத அதி­க­ரிப்­பாகும்.

ஏற்­று­மதி வரு­மா­னத்தில் 2019 ஏற்­பட்­டுள்ள அதி­க­ரிப்பை போன்று இறக்­கு­மதி செல­வி­னத்­திலும் 2019 ஆம் ஆண்டு வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது.

2018 ஆம் ஆண்டு 22233 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக இருந்த இறக்­கு­மதி செல­வி­னங்­க­ளா­னது 2019 ஆம் ஆண்டு 19937 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக பதி­வா­கி­யுள்­ளது.

அத­ன் அ­டிப்­ப­டையில் இறக்­கு­மதி செல­வா­னது 2019 ஆம் ஆண்டு 2296 மில்­லியன் அமெ­ரிக்க டொலரால் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. இது 10.3 சத­வீத வீழ்ச்­ச­யாகும்.

இவ்­வாறு ஏற்­று­மதி வரு­மானம் அதி­க­ரித்து இறக்­கு­மதி செலவு குறை­வ­டைந்­து செல்கின்றமை­யா­னது நாட்டின் பொரு­ளா­தா­ரத்­துக்கு ஒரு ஆரோக்­கி­ய­மான விட­ய­மாக அமைந்­துள்ள அதே நிலையில் சுற்­று­லாத்­ துறை வரு­மானம் மற்றும் வெளி­நாட்டு பண வைப்­பு போன்­றன 2019 ஆம் ஆண்டு குறை­வ­டைந்­துள்­ளது.’2018 ஆம் ஆண்டு 4381 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக காணப்­பட்ட சுற்­று­லாத் ­துறை வரு­மா­ன­மா­னது 2019 ஆம் ஆண்டு 3592 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக பதி­வா­கி­யுள்­ளது அத­ன­ன் அடிப்­ப­டையில் பார்க்­கின்­ற ­போது 789 மில்­லியன் அமெ­ரிக்க டொலரால் குறை­வ­டைந்­துள்­ளது. இது 18.0 சத­வீத வீழ்ச்­சி­யாகும்.

வெளி­நா­டு­களில் இருந்து நாட்­டுக்கு அனுப்­பப்­படும் பண­வ­னுப்­பு­தலும் குறை­வ­டைந்­துள்­ளது. 2018 ஆம் ஆண்டு 7015 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் வெளி­நாட்டு பண­வ­னுப்­புதல் பதி­வா­கி­யி­ருந்­தது.

இது 2019 ஆம் ஆண்டு 6717 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் பார்க்கின்ற போது 298 மில்லியன் அமெரிக்க டொலரால் பணவனுப்புதல் குறைவடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது 4.3 சதவீத வீழ்ச்சியாகும்.