ஜனாதிபதி தேர்தலில் எதிர் தரப்பினர்களுக்கு இருந்த கால அவகாசம் எமக்கு இருக்கவில்லை..!

0

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியதை போன்றல்லாது, வேறுப்பட்ட சூழ்நிலையின் கீழேயே பொதுத் தேர்தலில் களமிறங்குவதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே சஜித் பிரேமதாஸ இதனை தெரிவித்தார்.

 

மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கு எமது எதிர் தரப்பினர்களுக்கு இருந்த கால அவகாசம் எமக்கு இருக்கவில்லை. காரணம், எம்மை அனைத்து இடத்திற்கும் அனுப்பினர், எமக்கும் செல்ல வேண்டிய நிலையிருந்தது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நான் எங்கும் செல்வதில்லை. அப்படி செல்லவும் நான் தயாராகவும் இல்லை.

இந்நாட்டிற்கு புதிய ஆற்றல் மிகுந்த ஆரம்பம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கம் என தெரிவித்துள்ளார்.