பிரபல பாடசாலையில் கடமையேற்கவுள்ள அதிபருக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள்..!

0

வவுனியாவின் பிரபல பாடசாலை ஒன்றில் கடமையேற்கவுள்ள அதிபருக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்ட சம்பவம் அண்மையில் இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

குறித்த பிரபல பாடசாலையின் அதிபர் அண்மையில் வெளி மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில், அவ் வெற்றிடத்திற்கு புதிய அதிபராக குறித்த அதிபர் வலயக் கல்வி அலுவலகத்தால் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் குறித்த அதிபர் கடமைகளை பொறுப்பேற்க உள்ள நிலையில் குறித்த துண்டுப் பிரசுரங்கள் வீதிகளில் வீசப்பட்டுக் காணப்பட்டன.

குறித்த பிரசுரங்களில் குறித்த அதிபர் எமது பாடசாலைக்கு பொருத்தமற்றவர், துஸ்பிரயோகக் குற்றச் சாட்டுகள் உள்ள நிலையில் வேறு அதிபரை நியமிக்க வேண்டும், எமது கிராமத்தையும், எமது இளைஞர் யுவதிகளையும் பாதுகாப்பது எமது கடமையாகும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேவேளை பாடசாலைகளுக்கு அதிபர் வெற்றிடம் காணப்படும் பட்சத்தில் பதவி வெற்றிட விண்ணப்பம் கோரப்படும் நடைமுறை வவுனியாவில் பின்பற்றப் படுவதில்லையா?

அத்துடன் குறித்த அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் உண்மையை கண்டறியும் படியும்,

இத்தகைய முரண்பாடுகளின் மத்தியில் குறித்த அதிபரை நியமிக்கும் பட்சத்தில் குறித்த அதிபர் சுயாதீனமாகச் செயற்பட முடியாத சூழலே ஏற்படும் என்பதை உணர்ந்து பொருத்தமான வேறு அதிபர் ஒருவரை நியமிப்பதே சாலப் பொருத்தமாக அமையும் என்பதையும் தமிழ்பொறி தெரிவித்துக் கொள்கின்றது.