அதிபர், ஆசிரியர்கள் இன்று முதல் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில்..!

0

அதிபர் , ஆசிரியர்கள் இன்று வியாழக்கிழமை முதல் சட்டப்படி வேலை செய்வதற்குத் தீர்மானித்துள்ளனர்.

நேற்றைய தினம் அதிபர் , ஆசிரியர்கள் தொழிற் சங்கங்களினால் நேற்று புதன் கிழமை நாடு பூராக சுகவீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதுவரை தீர்வு கிடைக்காமையால் இன்று முதல் கற்றல் செயற்பாடுகளை தவிர வேறு செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்து சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

ஆசிரியர் சேவையை தொழில்முறை சேவையாக மாற்றுதல், இடைக்கால சம்பள சுற்றறிக்கை வழங்குதல், கல்விக்கு 6 சதவீத ஒதுக்கீடு, பாடசாலை பராமரிப்புக்காக பெற்றோரிடமிருந்து பணம் சேகரிப்பதைத் தவிர்த்தல், 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர் சேவையில் இணைந்த ஆசிரியர்களுக்கு முழு ஓய்வூதியம் வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை இன்னும் இரு வாரத்தில் தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொடர் பணிப் பகீஸ்கரிப்பை மேற்கொள்ளத் தீர்மானித்து்ளனர்.