இலங்கையின் புதிய விசாரணை குழுவை நிராகரித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர்..!

0

மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளுக்கென மற்றுமொரு ஆணைக் குழுவை அமைக்கும் இலங்கையின் அறிவித்தலை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்லே பச்செலெட் நிராகரித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்றைய தினம் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் தினேஸ் இலங்கையின் நிலைப்பாட்டை அறிவித்ததுடன் தாம் இலங்கை தொடர்பான 30/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குவதிலிருந்து விலகுவதாகவும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான வேறான ஆணைக்குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய மனித உரிமைகள் ஆணையாளர் வெளிவிவகார அமைச்சரின் அறிவிப்பை நிராகரித்துடன் இலங்கையின் உள்ளக பொறிமுறைகள் மற்றும் பொறுப்பு கூறல் விடயத்தில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்துடன் இன்னுமொரு ஆணைக்குழுவை அமைப்பதன் மூலம் விசாரணைகளை முன்னகர்த்த முடியுமென நம்ப முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் இலங்கை மீதான சர்வதேசத்தின் கெடுபிடி அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.