மாடுகளுக்கு புதிய வகை நோய்; நாளை முதல் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை..!

0

நுவரெலியா மாவட்டத்தில் நாளை முதல் மாட்டிறைச்சி விற்பனைக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் தற்போது வாய் மற்றும் குரல் சம்பந்தமான நோய் ஒன்று அதிகமாக பரவி வருகின்றது.

இதனையடுத்து நுவரெலியா மாவட்ட செயலாளர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை, அம்பகமுவ, வலப்பனை, ஹங்குரங்கெத்த ஆகிய பிரதேச செயலக வட்டாரங்களில் மாட்டிறைச்சி விற்பனை மற்றும் கால்நடைகளை ஏற்றி வாகனப் பிரயாணங்கள் என்பவற்றுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாளை முதல் மறு அறிவித்தல் வரை மாவட்டத்திலுள்ள அனைத்து மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களும் மூடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நுவரெலியா உள்ளிட்ட தென்பகுதிக்கு வடகிழக்கு மாகாணங்களில் இருந்தே மாட்டிறைச்சி விநியோகிக்கப்படுவதால் வடகிழக்கு மாகாணங்களிலும் நோய்ப் பாதிப்பை கருத்தில் கொண்டு மாட்டிறைச்சி விற்பனையை தற்காலிகமாக தடை செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.