மாற்று இனத்திற்கு வால் பிடிப்பவர்கள் உடன் நிறுத்த வேண்டும்; இருவார கால அவகாசம்..!

0

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலானது தமிழர்களின் இருப்புக்கான தேர்தலாக காணப்படுவதால் அனைத்து தமிழர்களும் உங்களுக்கு விரும்பிய தமிழ்க் கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும்.

மாறாக முஸ்லீம் கட்சிகளின் பின்னோ, சிங்கள கட்சிகளின் பின்னோ சென்று தமமிழர் வாக்குகளை பிரிக்கும் கேவல வேலையை செய்ய ஏண்டாம் எனவும்,

முஸ்லீம்கள் தங்களின் முஸ்லீம் வேட்பாளர்களுக்கும், சிங்களவர்கள் சிங்கள வேட்பாளர்களுக்கும் மட்டுமே வாக்களிக்கும் நிலையில் தமிழர்களாகிய நாம் எமது அடையாளத்தை இழந்து அற்ப சலுகைக்காக மாற்று இனத்தவருக்கும் மாறறு இனத்தவருடன் இணைந்து போட்டியிடும் எம்மவருக்கும் வாக்களிக்கின்றோம். இதன் மூலம் பயனடைவது குறித்த கட்சிகளே.

எனவே தமிழ் மக்கள் இது தொடர்பில் சிந்திக்க வேண்டும் எனவும் தமிழ் மக்களின் வாக்குகளை ஈபிடிபியாகிய எமக்கு மட்டும் தரத் தேவையில்லை மாறாக கூட்டமைப்புக்கோ, ஈபிஆர்எல்எப்க்கோ, டெலோவிற்கோ, புளொட்டுக்கோ, ஈபிடிபிக்கோ வழங்குங்கள் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அ்த்துடன் இரு கிழமைக்குள் தமிழர்கள் இது தொடர்பில் இறுதி முடிவை எடுக்க வேண்டும் எனவும் ஒருபோதும் முஸ்லீம், சிங்கள கட்சிகளின் பின்னே செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த கூற்றானது பல்வேறு தரப்பினர் இடையே வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.