முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கஞ்சாவுடன் வவுனியாவைச் சேர்ந்த மூவர் கைது..!

0

புதுக்குடியிருப்பு பகுதியில் சுமார் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சோதனைகளை மேற்கொண்ட போது இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து சுமார் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

கைது செய்யப்பட்டவர்கள் வவுனியாவைச் சேர்ந்த 26 ,39, 41 வயதுடைய சந்தேக நபர்கள் என்று தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்