உலக நாடுகள் சர்வதேச விசாரணைக்கு முஸ்தீபு; கடும் நெருக்கடியில் இலங்கை..!

0

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனீவாவிற்கான இயக்குநர் ஜோன் பிசர் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய நாடுகளிற்கான தனது அர்ப்பணிப்புகளை இலங்கை கைவிடுகின்றது என கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாரும் ஏமாறக் கூடாது, யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள ராஜபக்சக்கள் பொறுப்புக் கூறுதலை முன்னகர்த்துவதற்கான எந்த வாய்ப்பும் இனி இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த காலத்தில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த நாடுகளும் சர்வதேச விசாரணையை கோருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதிக்கு எதிர்வரும் நாட்கள் மிகவும் சவாலாக இருக்கப் போவதாக அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.