சிறுமியாகிய மகளின் எதிர்காலத்தை சிதைத்த காமுகத் தந்தை கைது..!

0

பொகவந்தலாவ தோட்ட பகுதி ஒன்றில் 15 வயது மகள் கர்ப்பம் தரித்த சம்பவம் தொடர்பில் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குறித்த சிறுமி வயிற்றுவலி காரணமாக பொகவந்தலாவ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் டிக்கோயா, கிழங்கன் வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன் போதே குறித்த சிறுமி கர்ப்பம் தரித்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சந்தேக நபரான தந்தை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.