அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மகனின் தாக்குதலில் இளைஞன் படுகாயம்..!

0

வட்டவல – தியகல தோட்டத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வட்டவல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணி செயலாளரும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகனுமாகிய ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதேச அமைப்பாளர் அமில உள்ளிட்ட 7 பேர் அடங்கிய குண்டர் குழுவினரே தியகல தோட்ட இளைஞர் ஒருவரை அச்சுறுத்தி தாக்கியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த தோட்டத்தில் என எஸ்.சிவகாந்தன் என்ற இளைஞனின் முயற்சியால் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சகோதரர் முத்தையா பிரபாகரன் மைதானம் ஒன்றை புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அதனை செய்யக் கூடாது என எஸ்.சிவகாந்தன் என்ற இளைஞனை ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் மிரட்டியுள்ளனர்.

எனினும் அதனையும் மீறி விளையாட்டு மைதானத்தை புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதால் ஆத்திரமடைந்த ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் குறித்த இளைஞரின் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி அச்சுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியகல மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ள நிலையில் வட்டவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோட்டபாய அரசில் மக்களுக்கான பல்வேறு நல்ல விடயங்கள் இடம் பெற்ற போதும் அதிகார வர்க்க்கத்தின் அடக்கு முறைகள், வன்முறைகள் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அண்மையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களைக் கடிந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.