ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பெண்கள் மீது பொலிசார் கொடூர தாக்குதல்..!

0

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த தாக்குதலில் 3 இளம் பெண்கள் படுகாயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் தொழிலை இழந்தவர்களின் ஆர்பாட்டத்தை கலைக்க முயற்சித்த போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பெண்களை அங்கிருந்து அகற்ற, பெண் பொலிஸ் அதிகாரிகளே ஈடுபடுத்தப்படுவார்கள். எனினும் நேற்று ஆண் பொலிஸார் மிக மோசமான முறையில் தாக்குதல் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பெண்களை தூக்கி கீழே போடுவதனை காண முடிந்ததாகவும் ஒரு பெண்ணின் கழுத்தை நெரிக்கும் காட்சிகளும் பதிவாகி உள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் சில பெண்களை வீதியில் இழுத்து சென்றதனையும் அங்கு பலர் அவதானித்துள்ளனர்.

கலந்துரையாடல் ஒன்றிற்கு வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கமையவே இந்த ஊழியர்கள் நேற்று காலை ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் சென்றுள்ளனர்.

மாலை 4 மணி வரை கலந்துரையாடலுக்கு சந்தர்ப்பம் வழங்காமையினாலேயே அவர்கள் வீதியை மறைத்து எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது