வவுனியா இ.போ.ச சாலையில் தமிழர்களுக்கு அநீதி; நடவடிக்கை எடுப்பாரா கோட்டா???

0

வவுனியா இ.போ.ச சாலையில் முஸ்லிம்,சிங்கள ஊழியர்களுக்கு ஒரு நீதி, தமிழர்களுக்கு இன்னொரு நீதி என பக்கச் சார்பான செயற்பாடுகள் தொடர்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் பிரபல முஸ்லீம் அமைச்சர் ஒருவராலும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவராலும் அரசியல் நியமனமாக வவுனியா, மன்னார் சாலைக்கு முஸ்லீம் சகோதரர்கள் பெருவாரியாக நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சாலை முகாமையாளர் உள்ளிட்ட நிர்வாகிகளால் கடந்த காலத்தில் ஹஜ் விடுமுறை, வெசாக் என்பன அனுஸ்டிப்பதற்காக குறித்த இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு விடுமுறைகள் வழங்கப்பட்டன.

எனினும் தற்போதய ஜனாதிபதி கோட்டபாயவின் ஆட்சியில் இந்துக்களின் புனித சிவராத்திரி அன்று கடமைக்கு செல்லாத தமிழ் ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

85% தமிழர்களும் 70%க்கும் அதிகமான இந்துக்களும் வாழும் வவுனியாவில் சிறுபான்மை இனங்களாகவுள்ள குறித்த இரு இனத்தவர்களும் இந்துத் தமிழர்களை அடக்கியாள முயற்சிப்பதை முற்றாகக் கண்டிக்கின்றோம்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் உடன் விசாரணைகளை ஆரம்பித்து குறித்த ஊழியர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தயங்கும் பட்சத்தில் வடக்கு மாகாண தமிழர்கள் அரச பேரூந்தை முழுமையாக புறக்கணிக்கும் நிலை ஏற்படும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.