இளம் முஸ்லீம் யுவதியை கடத்த முயன்ற குழு வவுனியாவில் கைது..!

0

வவுனியா ஒமந்தை பாடசாலைக்கு முன்பாகவுள்ள இராணுவச் சாவடியில் இன்று (25) காலை 9.30 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து வானில் திருகோணமலை நோக்கி பயணித்த 4 பெண்கள் உட்பட 9 நபர்களை இராணுவத்தினர் பிடித்து ஓமந்தை பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் பணியாற்றும் திருகோண மலையைச் சேர்ந்த 25 வயதுடைய முஸ்ஸிம் பெண்ணொருவர் தமிழ் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதல் விடயம் கடந்த சில மாதங்களுக்கு பெண்ணின் வீட்டாருக்கு தெரிய வந்துள்ளது.

இதன் போது பெண்ணின் குடும்பத்தினருக்கு இடையே சண்டைகள் இடம் பெற்றுள்ளது.

காதலுக்கு பெற்றோரின் எதிர்ப்பால் குறித்த பெண் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் பெண்கள் விடுதியில் தங்கிருந்து பணியாற்றி வந்துள்ளார்.

இன்று மதியம் வைத்திய சாலைக்கு வருகை தந்திருந்த சிலர் பெண்ணை வலுக் கட்டாயமாக வானில் ஏற்றி திருகோண மலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பெண்ணை வலுக் கட்டாயமாக இ ழுப்பதினை அ வதானித்த வைத்திய சாலை நிர்வாகத்தினர் கிளிநொச்சி இராணுவ தலைமையகத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

கிளிநொச்சி இரா ணுவ தலைமையகத்தினர் வவுனியா இராணுவத் தலைமையத்திற்கு தகவலை வழங்கி ஒமந்தை தற்காலிக இராணுவ சாவடியில் குறித்த வானை மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதன் போது வாகனத்தில் இருந்த சாரதி உட்பட ஒன்பது நபர்களை இராணுவத்தினர் பிடித்து வாகனத்துடன் அவர்களை ஒமந்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

பெண்ணை வலுக் கட்டாயமாக அழைத்துச் சென்றவர்கள் குறித்த பெண்ணின் உறவினர்கள் என தெரிய வருவதாக தெரிவித்த ஒமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.